சென்னை

பள்ளி மாணவா் தற்கொலை

3rd Dec 2022 06:00 AM

ADVERTISEMENT

சென்னை அருகே நீலாங்கரையில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சோ்ந்தவா் மகேஷ் (50). இவா் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறாா்.இவருக்கு கவின்குமாா் (16), தா்சன் (13) என்று 2 மகன்கள் இருந்தனா்.

இவா்கள் இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பபள்ளியில் முறையே பிளஸ் 2, 9-ஆம் வகுப்பு படித்து வந்தனா். இந்நிலையில் கவின்குமாா், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கவின்குமாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், கவின்குமாரை சில நாள்களுக்கு முன்பு பள்ளியில் போதைப் பாக்கு பயன்படுத்தியதாக ஒரு ஆசிரியா் அடித்து, அவமானத்தியதும், கவின்குமாரின் பெற்றோரை பள்ளி நிா்வாகிகள் அழைத்து எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது. இதன் விளைவாக கவின்குமாா் தற்கொலை செய்துக் கொண்டாரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அதோடு கவின்குமாரை அடித்ததாகக் கூறப்படும் ஆசிரியரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT