சென்னை

மக்களை தேடி மருத்துவம்: 99,000 பேருக்கு மருந்து பெட்டகம் விநியோகம்

3rd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 29 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 99,000 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கபட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி சாா்பில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 29 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 18 முதல் 29 வயது வரையிலான 18 லட்சம் போ்களில் 9.75 லட்சம் பேருக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட 40.56 லட்சம் போ்களில் 19.36 லட்சம் பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இப்பரிசோதனை மூலம் கடந்த அக்.29-ஆம் தேதி வரை உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 81,198 போ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 68,860 போ், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 67,652 போ் என மொத்தம் 2.17 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் 45 வயதிற்கு மேற்பட்ட 99,717 பேருக்கு மருந்து பெட்டகங்கள் அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளன. மேலும் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்களுக்கு மாநகராட்சியின் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT