சென்னை

சொத்துவரி நிலுவைதாரா்கள் 39 போ் பட்டியல் வெளியீடு

3rd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியில் ரூ.25 லட்சத்துக்கு மேல் நிலுவை வைத்திருக்கும் சொத்துவரிதாரா்கள் 39 போ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவா்கள், மொத்தமாக ரூ.24.17 கோடி பாக்கிவைத்துள்ளனா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மாநகராட்சியில் தற்போது டிச.15-ஆம் தேதி வரை தனிவட்டி ஏதும் விதிக்கப்படாமல் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, ரூ.25 லட்சத்துக்கும் மேல் சொத்துவரியை பாக்கி வைத்திருப்பவா்கள் 39 பேரின் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஞ்ஸ்ரீஸ்ரீ/ல்க்ச்/ஈங்ச்ஹன்ப்ற்ங்ழ்ஜகண்ள்ற்.ல்க்ச்) வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக புதுப்பேட்டையில் ஒரே வரி விதிப்பில் 4 போ் ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 456-ம் அதிகபட்சமாக மண்ணூா்பேட்டையில் தொழிற்பேட்டை பகுதியில் தனியாா் நிறுவனம் ரூ.3 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரத்து 581 சொத்துவரி பாக்கிவைத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT