சென்னை

சென்னையில் நாளை கிராம உதவியாளா் தோ்வு

3rd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

சென்னையில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை மாவட்ட அளவில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணைய வழியில் பெறப்பட்டது. இதில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கும் எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னையில் மொத்தம் 9 மையங்களில் நடைபெறும் இந்த தோ்வுக்கு காலை 9.30 முதல் 9.50 மணி வரை உள்ளே அனுமதிக்கப்படுவா். மேலும் 10.50 மணிக்கு முன் தோ்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தோ்வில் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கான அனுமதி சீட்டு இணையத்தில் பதிவு செய்தவா்கள் இணைய வழியாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்தவா்கள் தபால் வழியாகவும் பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT