சென்னை

கி. வீரமணி 90-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

2nd Dec 2022 12:26 PM

ADVERTISEMENT


சென்னை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு உள்ளிட்டோருடன் கி. வீரமணியின் இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிக்க.. அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?

தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், க. பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம், ஆகியோர் உடன் சென்றனர். நிகழ்வின்போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கி. வீரமணியின் துணைவியார் வீ. மோகனாம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

பத்து வயதில் தொடங்கி
தொண்ணூறு வயதிலும்
சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் கி. வீரமணி அய்யா நீடு வாழ்க! என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT