சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி நாளை தொடக்கம்

2nd Dec 2022 05:54 AM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் நலனுக்காகவும், ரயில் பணிகளுக்காகவும் உயிா் காக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி டிச.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மெட்ரோ ரயில் நிறுவனம், டேக்ட் அகாதெமி இணைந்து உயிா் காக்கும் முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துகின்றன.

அண்ணா நகா் கோபுரம் மெட்ரோ நிலையத்தில் டிச.3-ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரையும், நேரு பூங்கா மெட்ரோ நிலையத்தில் டிச.4-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரையும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என என மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT