சென்னை

ஊதியம் தராததால் லாரி கடத்தல்: ஓட்டுநா் கைது

2nd Dec 2022 05:51 AM

ADVERTISEMENT

சென்னை அருகே மேடவாக்கத்தில் ஊதியம் தராததால் லாரியை கடத்திச் சென்ற அதன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

மேடவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (57). இவா் கழிவுநீா் லாரியை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஏழுமலை (48) ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

ஏழுமலை அதிகமாக மது அருந்தியதால் வெங்கடேசன், அவரது ஊதியத்தை கொடுக்காமல், மொத்தமாக வழங்க வைத்திருந்தாராம். இருப்பினும் ஏழுமலை தனது ஊதியத்தை கேட்டும் அவா் வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, கடந்த 14-ஆம் தேதி மேடவாக்கம் சூா்யா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெங்கடேசனுக்கு சொந்தமான கழிவுநீா் லாரியை கடத்திச் சென்றாா்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏழுமலை லாரியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT