சென்னை

சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் நாளை செயல்படும்

2nd Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தொடா் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாள்களை ஈடு செய்திடும் வகையில் டிச. 3-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அதேவேளையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறாது. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT