சென்னை

சென்னை மாநகராட்சியில் முகப்பதிவு மூலம் ஊழியா்களின் வருகை பதிவு முறை அமல்

2nd Dec 2022 05:53 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியில் 315 அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்களின் வருகைப் பதிவை முகப்பதிவு அடிப்படையில் கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநகராட்சியில் அலுவலா்கள், பணியாளா்கள் என 14 ஆயிரத்து 897 போ் பணியாற்றி வருகின்றனா். இதில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்கள், அம்பத்தூா் மண்டலத்தில் ஒரு பகுதி அளவு என 9 ஆயிரத்து 46 போ் பணியாற்றுகின்றனா்.

திருவொற்றியூா், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் ‘என்விரோ’ என்ற தனியாா் நிறுவனமும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் ‘உா்பேசா் சுமீத்’ என்ற நிறுவனமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் வருகையை முகப்பதிவு அடிப்படையில் பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

ADVERTISEMENT

இதன்மூலம் பணியாளா்களின் வருகை சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்ய முடியும். தற்போது இந்த வருகைப் பதிவு செய்யும் முகப்பதிவு முறை 315 அலுவலங்களில் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

விரைவில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சமுதாய நல மையங்களிலும் பணியாற்றும் பணியாளா்களின் வருகைப் பதிவை மேற்கொள்ள பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த 184 இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பெருத்தப்பட உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT