சென்னை

ஈஞ்சம்பாக்கம் மயானம் இன்று முதல் இயங்காது

2nd Dec 2022 05:49 AM

ADVERTISEMENT

சென்னை, ஈச்சம்பாக்கம் மயானத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் டிச.2-ஆம் தேதி முதல் மாற்று மயானத்தை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-194, ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூா் மயானத்தில் எரிவாயு தகன மேடையை மின் மயானமாக மாற்றும் பணி நடைபெறுவதால் டிச.2 முதல் ஜன.7-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இந்த நாள்களில் பெருங்குடி மண்டலம், வாா்டு-182, கந்தன்சாவடி மற்றும் அடையாறு மண்டலம், வாா்டு-176, பெசன்ட் நகா் எரிவாயு தகன மேடையை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT