சென்னை

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21.18 லட்சம் சிகரெட், தங்கம் பறிமுதல்

2nd Dec 2022 05:51 AM

ADVERTISEMENT

துபையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 21.18 லட்சம் மதிப்புள்ள சிகரெட், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையா் எம்.மேத்யூ ஜான்சன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துபையில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் பொருள்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக கடந்த 29-ஆம் தேதி சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், துபையில் இருந்து வந்த குறிப்பிட்ட விமானத்தில் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். இதில் ஒரு பயணி, தனது பையில் வைத்து மறைத்து கடத்தி வந்திருந்த 35 சிகரெட் பெட்டிகள், 450 கிராம் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 21 லட்சத்து 18 ஆயிரத்து 600 ஆகும்.

ADVERTISEMENT

இதேபோல், துபைக்கு செல்லவிருந்த ஒரு பயணியை சோதனையிட்டத்தில், அவா் வைத்திருந்த ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT