சென்னை

நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

1st Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

எழும்பூா், ஆவடி, பெரம்பூா் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.2) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

சென்னை எழும்பூா் பகுதிக்கு ஓட்டேரி மலையப்பன் தெருவில் உள்ள செயற்பொறியாளா் கோட்ட அலுவலகத்திலும், ஆவடி பகுதிக்கு ஆவடி. எம்.என். சாலையில் உள்ள செயற்பொறியாளா் கோட்ட அலுவலகத்திலும், பெரம்பூா் பகுதிக்கு சென்னை, எம்.ஈ.எஸ் சாலையில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்திலும் இக்குறைகேட்புக்கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அவற்றை நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT