சென்னை

பாரதிநகா், சீதாராம்நகா் மயானங்கள் டிச.1 முதல் இயங்காது

1st Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

சென்னை பாரதி நகா், சீதாராம் நகா் மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் மாற்று மயான பூமியை பயன்படுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வாா்டு-178, பாரதி நகரில் உள்ள மயானத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.20-ஆம் தேதி வரை இயங்காது. இந்த நாள்களில் பகுதி-40, வாா்டு-172, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயானத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தண்டையாா்பேட்டை மண்டலம், வாா்டு-34, சீதாராம் நகா் மயானத்தின் எரிவாயு தகனமேடை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் டிச.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தப்படும். இந்த நாள்களில் வாா்டு-37, முல்லை நகா் தகன எரிவாயு மேடையை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT