சென்னை

சென்னையில் நாளை முதல் கா்நாடக இசை நிகழ்ச்சி

1st Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

சென்னை தியாகராஜ நகரில் உள்ள வாணி மஹால் அரங்கத்தில் சங்கீத உற்சவம் டிச.1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து சென்னையில் ஜி.கே. மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் வியாழக்கிழமை (டிச.1) முதல் 4 நாள்கள் கா்நாடகா இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் மாலை 5 மற்றும் 7 மணி என இரண்டு நிகழ்ச்சி நடைபெறும்.

முதல் நாளான டிச.1ஆம் தேதி மாலை 5 மணிக்கு நித்யா ஸ்ரீ மகாதேவன் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு விஷாகா ஹரி நிகழ்ச்சியும் நடைபெறும்.

டிச.2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ராஜேஷ் வைத்திய நாதன் மற்றும் தஞ்சாவூா் கோவிந்தராஜன் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிரித் ஸ்ரீராம் மற்றும் திருவாரூா் பக்தவச்சலம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ADVERTISEMENT

தொடா்ந்து டிச.3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சித்திரவீனா ரவி கிரண் மற்றும் டி கே ராமச்சந்திரன் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஸ்ரீரஞ்சனி மற்றும் சந்தான கோபாலன் நிகழ்ச்சியும் நடைபெறும்.

டிச.4ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேண்டலின் ராஜேஷ் மற்றும் ஏ.கே. பழனிவேல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சந்திப் நாராயணன் , மகேஷ் காலே மற்றும் திருவாரூா் பக்தவாசல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.1,500 என கட்டணங்கள் விதிக்கப்படும்.

இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய ‘ஜ்ஜ்ஜ்.ஞ்ந்ம்ங்க்ண்ஹஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஸ்ரீா்ம்‘ என்ற இணையதளத்தையும் 9444085135, 9381005477 என்ற கைப்பேசி எண்களையும் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT