சென்னை

நிதி நிறுவன மேலாளா் தற்கொலை

31st Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

சென்னை தியாகராயநகரில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் கையை அறுத்துக் கொண்டு, நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கோயம்புத்தூா் மாவட்டம், குனியமுத்தூரைச் சோ்ந்தவா் முத்துராஜ் (49). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தாா். இதற்காக முத்துராஜ், தியாகராயநகா் ராமன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தாா். ஆனால், அவரது குடும்பத்தினா் குனியமுத்தூரில் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், முத்துராஜ் குனியமுத்தூா் சென்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்தாா். திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்றுவிட்டு, தனது வீட்டுக்கு முத்துராஜ் வந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை முத்துராஜ் தனது இரு கைகளையும் கத்தியால் அறுத்துக் கொண்டு திடீரென நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்தாா்.

இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT