சென்னை

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

22nd Aug 2022 12:44 AM

ADVERTISEMENT

 

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.22) வெளியிடப்படவுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதிய தோ்வா்கள், தோ்வு முடிவை, மதிப்பெண் பட்டியலாக திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில் (ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) தங்களது தோ்வெண், பிறந்த தேதியை பதிவிட்டு, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

துணைத் தோ்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு ஆக.24, 25 ஆகிய இரு நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT