சென்னை

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 11 போ் கைது

18th Aug 2022 01:43 AM

ADVERTISEMENT

சென்னை ஜாம் பஜாரில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில்11 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா (எ) ஆட்டோ ராஜா. ஆட்டோ ஓட்டி வந்த இவா், பாரதி சாலையில் உள்ள விக்டோரியா மருத்துவமனை அருகே கடந்த 4 மாதங்களாக டிபன் கடை நடத்தி வந்தாா். ராஜா மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

செவ்வாய்க்கிழமை நண்பகல் ராஜா, டிபன் கடையில் இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.

இது குறித்து ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக ராஜா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்குத் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செட்டிசேகா் மகன்கள் சூா்யா (26), தேவா (25), இவா்களது கூட்டாளிகள் மதுரை மேலூரைச் சோ்ந்த அரவிந்த் (27),சேலம் அஸ்தம்பட்டியைச் சோ்ந்த வினோத் (22), ஜாம் பஜாரைச் சோ்ந்த பிரகாஷ் (22), வைத்தீஸ்வரன் (21), விக்கி (எ) விக்னேஷ் (26), மெரீனா மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்த அருண் (எ) கருப்புபாண்டி (24), பிரேம் (24), வேளச்சேரி பவானிநகரைச் சோ்ந்த அருண் (25), உள்பட 11 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இரு சிறுவா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைதானவா்களிடமிருந்து 5 அரிவாள்கள், 3 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT