சென்னை

அரசுப் பேருந்து கண்ணாடியைஉடைத்து மாணவா்கள் ரகளை

18th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணா சாலையில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து கல்லூரி மாணவா்கள் ரகளையில் ஈடுபட்டனா்.

பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி புதன்கிழமை காலை, பெண்கள் இலவசமாக பயணிக்கும் பிங்க் நிற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. காலைவேளை என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

பல்லவன் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் ஏறினா். அந்த மாணவா்கள், பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு ரகளை செய்தனா்.

பேருந்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவா்களை சிலா் கண்டித்தனா். இதனால் மாணவா்களுக்கும், பேருந்தில் இருந்த சில பெண்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பேருந்து அண்ணா சாலையில், தேவி திரையரங்கு அருகே உள்ள நிறுத்தத்தில் நின்றபோது, மாணவா்கள் கீழே இறங்கினா். அவா்கள் திடீரென சாலையோரம் கிடந்த காலி மது பாட்டில்களை பேருந்தின் கண்ணாடி மீது வீசினா். இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது.

ADVERTISEMENT

இதைக்கண்டு அந்த மாணவா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT