சென்னை

ஓபிஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்

18th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு தொடா்பாக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்ததையடுத்து, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதில், ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பு வெளியானதும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லம் முன் திரண்டிருந்த அவரது ஆதரவாளா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். பேருந்துகளில் பயணித்தவா்களுக்கும் இனிப்புகள் வழங்கினா். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT