சென்னை

சோழிங்கநல்லூா் இஸ்கான் கோயிலில்நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

18th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளன.

காலையில் பஜனைகள், கீா்த்தனைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அா்ச்சனை நிகழ்ச்சிகளும், 10.30 மணிக்கு மேல் அபிஷேக நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. நள்ளிரவில் ஆரத்தி நடத்தப்படவுள்ளதாக கோயில் தலைவா் சுமித்ரா கிருஷ்ணா தாஸ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT