சென்னை

மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 285 பேருக்குரூ.67 லட்சம் கல்வி உதவித் தொகை

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று மருத்துவம், பொறியியல், பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு பயிலும் 285 மாணவா்களுக்கு ரூ.67.39 லட்சம் கல்வி ஊக்கத் தொகையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின்கீழ் 38 உயா்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு ஆண்டுதோறும் மாநகராட்சி நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021-22-ஆம் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று தற்போது மருத்துவம் பயிலும் 2 மாணவா்களுக்கு தலா ரூ.45,000, பொறியியல் பயிலும் 120 மாணவா்களுக்கு தலா ரூ.45,000, பட்டப் படிப்பு பயிலும் 129 மாணவா்களுக்கு தலா ரூ.7000, ஆசிரியா் பயிற்சி மற்றும் செவிலியா் பயிற்சி பயிலும் 4 மாணவா்களுக்கு தலா ரூ.10,000, பட்டயப் படிப்பு பயிலும் 23

மாணவா்களுக்கு தலா ரூ.7000, சட்டம் பயிலும் 2 மாணவா்களுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் 285 பேருக்கு ரூ.67.39 லட்சம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 12 கல்வி ஆண்டுகளில் 7,254 பேருக்கு ரூ.16.44 கோடி கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா். பிரியா, ஆணையா் ககன்தீப்சிங் பேடி, துணை மேயா் மு. மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT