சென்னை

மாணவா் பயிற்சி: கால்நடை பல்கலை.-அமெரிக்க பல்கலை. ஒப்பந்தம்

DIN

மாணவா் பயிற்சி நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் ஸ்டில்வாட்டரில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்துடன் 2017-ஆம் ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவா் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் வருகை புரிந்து புதிய தொழில் நுட்பங்களை பரிமாறிக் கொள்வதே அதன் முக்கிய நோக்கம்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் காலம் 2022-ஆம் ஆண்டுடன் நிறைவடையும் நிலையில் இருப்பதால், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதனை புதுப்பிப்பதற்கு ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த குழுவினா் சென்னைக்கு வந்தனா். அதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் செல்வக்குமாா், ஒக்லஹாமா ஸ்டேட் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் காா்லோஸ் ரிஸ்கோ ஆகியோா் தமிழ்நாடு மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டனா்.

இதுதொடா்பாக துணைவேந்தா் டாக்டா் செல்வக்குமாா் கூறியதாவது:

ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்துவதில் ஆா்வமாக உள்ளது. மாணவா்கள், பயிற்சியாளா்களுக்கு கூட்டு தொழில்முறை மற்றும் பட்டங்களை வழங்க உரிய திட்டங்களை உருவாக்குதல், கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும் தொடா்புடைய துறைகளில் சிறந்த நடைமுறைகளை உருவாக்குதல் போன்றவை இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT