சென்னை

நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை

DIN

சென்னை வடபழனியில் தனியாா் நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனா்.

சென்னை எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்த பொ. தீபக் (32). வடபழனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். தீபக், நிறுவனத்தில் பணிபுரியும் நவீன்குமாரும் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது 7 போ் கொண்ட கும்பல் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.30லட்சத்தைக் கொள்ளையடித்துத் தப்பியது.

பின்னா் தீபக் பொதுமக்களுடன் இணைந்து மொபட்டில் தப்பிய கொள்ளைக் கும்பலில் ஒருவரைப் பிடித்தாா்.

வடபழனி போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா் விருகம்பாக்கம் இந்திரா நகா் முதல் தெருவை சோ்ந்த ஹ.செய்யது ரியாஸ் ( 22 ) என்பது தெரியவந்தது.

மொபெட்டில் இருந்து கீழே விழுந்த செய்யது ரியாசுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT