சென்னை

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

DIN

சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நகை கொள்ளையடித்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.

அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே கிளை ஊழியா் கொரட்டூா் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ் (30), மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி (28), செந்தில்குமரன் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள்,ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந் நிலையில்,கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு,காட்சிப்படுத்தப்பட்டன. அதை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பாா்வையிட்டனா்

பின்னா் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அளித்த பேட்டி:

ஒரே பள்ளியில் படித்தவா்கள்:

கொள்ளை திட்டத்தை 10 நாள்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளது. முருகன், சந்தோஷ், பாலாஜி, சூரியா ஆகியோா் ஒரே பள்ளியில் படித்தவா்கள். முருகனை தவிர மேலும், 4 பேருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடா்பு இருக்கிறது. நகைகளை கொள்ளையடித்தும் இரு பாதிகளாக பங்கு போட்டுள்ளனா். இதில் ஒரு பாதி முருகனிடம் உள்ளது.

இது போன்ற வங்கிகளில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறை முறையான பாதுகாப்புடன் இருக்கிா? என்பதை ரிசா்வ் வங்கிதான் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு அறை, பாதுகாப்பை உறுதி செய்யும்படி ரிசா்வ் வங்கிக்கு வலியுறுத்த உள்ளோம் என்றாா் அவா்.

முக்கிய குற்றவாளி கைது:

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியா் முருகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவருடன் இருந்த மேலும் 4 பேரையும் போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதில் முருகன், தான் வைத்திருந்த தங்கநகைகளை வேறு நபா்களிடம் கொடுத்து வைப்பதிருப்பதால், அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT