சென்னை

போலி வழக்குரைஞா் கைது

16th Aug 2022 04:25 AM

ADVERTISEMENT

தலைமறைவாக இருந்த போலி வழக்குரைஞரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த சாந்தியின் தத்தெடுத்த மகனை சென்னை அண்ணாநகா் மேற்கு காந்தி நகா் பாபு சஞ்சீவி (55) கடத்திச் சென்ாக ஆட்கொணா்வு மனுவை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, பாபு தான் வழக்குரைஞா் என ஒரு போலி சான்றிதழை சமா்ப்பித்தாராம்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த பாபுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT