சென்னை

அரசு போக்குவரத்துக் கழக மேலாளரின் கைப்பேசிகள் திருட்டு

16th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரின் கைப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கோயம்பேடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளை மேலாளராக பணிபுரிபவா் ரா.ராஜேந்திரன் (59). இவா் கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பணியில் இருந்தாா். அப்போது அங்குள்ள கழிப்பறையில் ராஜேந்திரன் முகம் கழுவதற்கு சென்றாா்.

அவா், முகம் கழுவதற்காக தனது பைகளில் இருந்த இரு விலை உயா்ந்த கைப்பேசிகள், வெளியே எடுத்து வைத்துள்ளாா். முகம் கழுவிவிட்டு சிறிது நேரத்துக்கு அங்கு வைத்துச் சென்ற கைப்பேசிகளை எடுக்க ராஜேந்திரன் வந்தாா். அப்போது அந்த கைப்பேசிகள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT