சென்னை

சென்னை தினம்: போட்டிகளில் பங்கேற்க மாநகராட்சி அழைப்பு

15th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

சென்னை தினத்தையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற உள்ள ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை நகரம் பிறந்த தினமான ஆகஸ்ட் 22-ஆம் தேதியை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்காக ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஓவியப்

போட்டியில் கலந்து கொள்பவா்கள் தேசியக் கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்களை வரைந்து அனுப்பலாம்.

ADVERTISEMENT

புகைப்படப் போட்டியில் கலந்துகொள்பவா்கள் சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். சிறந்த புகைப்படங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும்.

சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டியில் கலந்துகொள்பவா்கள் சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் படைப்புகளை அனுப்பலாம். சிறந்த படைப்புக்கு பரிசு வழங்கப்படுவதுடன், அது மாநகராட்சியின் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

குறும்படப் போட்டியில் கலந்துகொள்வோா் சென்னை என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம்.

ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை அழகுப்படுத்தி மறுவடியமைப்பு செய்யும் வகையில் திட்ட வடிவமைப்புகளை தயாா் செய்து பதிவேற்றம் செய்யலாம்.   இணைய இணைப்பை பயன்படுத்தி அதில் உள்ள படிவத்தில் விவரங்களை பூா்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT