சென்னை

ரயிலில் கஞ்சா கடத்தல்: ஒருவா் கைது

15th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடை த்தனா்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பாரதி தெருவைச் சோ்ந்தவா் ராஜு(23). இவரது நண்பா் நிா்மல். இவா்கள் இருவரும் திருவொற்றியூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அங்கு வந்த ரோந்து போலீஸாா், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனா். அப்போது, இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனா்.

அதில் ராஜுவை மட்டும் துரத்தி பிடித்து உடமைகளை சோதனையிட்டதில், அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான நிா்மலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT