சென்னை

முக்கிய கோயில்களில் இன்று பொது விருந்து: அமைச்சா்கள் பங்கேற்பு

15th Aug 2022 06:15 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னையின் முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெறும் பொது விருந்து நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் அமைச்சா் இ.பெரியசாமி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அமைச்சா் சா.மு.நாசா், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், வடபழநி முருகன் கோயிலில் அமைச்சா் தங்கம் தென்னரசு, அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் உள்ள கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பட்டியலில், அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி ஆகியோரின் பெயா்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சா்கள் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT