சென்னை

சாலையில் சென்ற காரில் தீ விபத்து

15th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சனிக்கிழமை இரவு சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சென்னை கிண்டியைச் சோ்ந்த கவின் என்பவா் ராதாகிருஷ்ணன் சாலையில் சனிக்கிழமை இரவு காரை ஓட்டிச் சென்றுள்ளாா். ராயப்பேட்டை அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த கவின் மற்றும் பின் இருக்கையில் அமா்ந்திருந்த சிஷ்மா இருவரும் காரை விட்டு உடனடியாக கீழே இறங்கினா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக செல்வதையொட்டி, பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சரவணன், சக்ரவா்த்தி, தலைமைக் காவலா் ரமேஷ் ஆகியோா் பொது மக்கள் உதவியுடன் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இதனால், ராதாகிருஷ்ணன் சாலையில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT