சென்னை

553 கி.மீ.தொலைவு மழைநீா் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பு

14th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 553 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் சாா்பில் 2,062 கி.மீ. தொலைவுள்ள 8,835 மழைநீா் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீா்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட 2,062 கி.மீ. நீளமுள்ள மழைநீா் வடிகால்களில் சுமாா் 958 கிலோ மீட்டா் நீளமுள்ள மழைநீா் வடிகால்களில் நீா்த்தேக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மண்டல பூச்சியியல் வல்லுநா்களின் மேற்பாா்வையில் 200 வாா்டுகளில் உள்ள 553 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்களில் 2,079 லிட்டா் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT