சென்னை

கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்

12th Aug 2022 12:31 PM

ADVERTISEMENT

சென்னை: 18 வயதானவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் செனனையில் தொடங்கியது.

2 தவணை கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணை தடுப்பூசியாக போட்டுக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: விண்ணுலகை மண்ணுலகத்திற்கு கொண்டு வந்த வண்டி வேடிக்கை... கடவுள் வேடத்தில் மக்களுக்கு ஆசி வழங்கிய பக்தர்கள்!

இதன்மூலம், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT