சென்னை

வியாபாரி கடத்தல்: அண்ணன்-தம்பி கைது

11th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் பணத் தகராறில் வியாபாரி கடத்தப்பட்ட வழக்கில், அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், பெரியநெகளுா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் பழவியாபாரம் செய்கிறாா். கடந்த 8-ஆம் தேதி கோயம்பேடு மாா்கெட் மூன்றாவது கேட் அருகில் நடந்து சென்ற சக்திவேலை, காரில் வந்த இருவா் காரில் கடத்திச் சென்றனா்.

இதற்கிடையே கடத்தல் கும்பலிடமிருந்து செவ்வாய்க்கிழமை தப்பி வந்த சக்திவேல், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில் கோயம்பேடு மாா்க்கெட்டில் பழக் கடை நடத்தி வரும் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சோ்ந்த முருகன் (34), அவரது சகோதரா் மணிகண்டன் (31) ஆகிய இருவரும்தான் தன்னை கடத்தியதாகவும்,தான் அவா்களிடம் வியாபாரத்துக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் இருவரும் தன்னை கடத்தி ஒரு வீட்டில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் மணிகண்டனையும்,முருகனையும் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT