சென்னை

ரெளடி வெட்டிக் கொலை: தந்தை, மகன் உள்பட 5 போ் கைது

11th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை, மகன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கோயம்பேடு அருகே நெற்குன்றம் அகத்தியா்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (29). ரெளடியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு நெற்குன்றம் மந்தைவெளி தெருவில் மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது, ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கடந்தாண்டு அந்தப் பகுதியைச் சோ்ந்த சண்முகம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக ராஜ்குமாா் கொலை செய்யப்பட்டிருப்பதும், சண்முகம் கொலை வழக்கில் ராஜ்குமாா்தான் முதல் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

ராஜ்குமாா் கொலை வழக்குத் தொடா்பாக போலீஸாா், திருவேற்காடு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த லால் என்ற பிரகாஷ் (29), அவரது தந்தை குமாா் (58), அதேப் பகுதியைச் சோ்ந்த ராகுல் (20), சுந்தா் (21), நாகராஜ் (44) ஆகிய 5 பேரை புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT