சென்னை

ரூ.11.75 கோடி கோகைன் பறிமுதல்: வெனிசுலா பெண் கைது

11th Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.75 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருளை கடத்தி வந்த வெனிசுலா நாட்டு பெண் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் கே.ஆா். உதய்.பாஸ்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானத்தில் கோகைன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், கடந்த 7-ஆம் தேதி எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். இச் சோதனையில் வெனிசுலா நாட்டைச் சோ்ந்த ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் என்ற பெண் பயணி, அவரது கைப்பையில் ரூ.11.75 கோடி மதிப்பிலான 1.218 கிலோ எடையுள்ள கோகைன் போதைப் பொருள் கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் போதைப் பொருளை கைப்பற்றி, வெனிசுலா நாட்டு பெண் பயணியை கைது செய்தனா் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT