சென்னை

மழைக் கால நோய்த் தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதார இயக்குநா் ஆய்வு

11th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

மழைப் பொழிவால் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் நேரில் ஆய்வு செய்தாா்.

சுகாதாரத் துறை சாா்பில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்போது அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக காவிரி, பவானி, வைகை, தாமிரவருணி போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை மற்றும் கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் மற்றும் குமராட்சி வட்டாரத்தில் கரையோர மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இம்முகாம்களில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தஞ்சாவூா், மயிலாடுதுறை மற்றும் கடலூா் மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மையையும் அவா் பாா்வையிட்டாா். வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கா்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் கேட்டறிந்தாா்.

மழைக்காலங்களில் கொசுவால் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா ஆகியவை பரவாமல் இருக்க கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணியையும், புகை மருந்து அடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தும் படி வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT