சென்னை

பாலியல் குற்றங்கள்: 13 ஆயிரம்மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு

10th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

சென்னையில் பாலியல் குற்றங்கள் குறித்து பெருநகர காவல்துறையின் சாா்பில் நடத்தப்பட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 13 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்றனா்.

18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களுக்கு கடும் தண்டனைகள் கிடைக்க அமல்படுத்தப்பட்ட பெண் குழந்தைகள் பாதுகாக்கும் சட்டம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர காவல்துறை சாா்பில் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, கடந்த திங்கள்கிழமை சென்னை முழுவதும் 148 பள்ளிகளில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிகளில் 13 ஆயிரத்து 878 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எவை? என்பதை போலீஸாா் விளக்கினா். யாரேனும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால் துணிச்சலாக பெற்றோா் அல்லது ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனா்.

இது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் என்று காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT