சென்னை

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

9th Aug 2022 09:36 AM

ADVERTISEMENT

சென்னை: இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி  நிறைவு விழாவையொட்டி மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியே செல்ல வாகனங்களுக்கு அனுமதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈவிகே சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா காலை நோக்கி செல்ல அனுமதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிக்க: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ADVERTISEMENT

மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT