சென்னை

தாம்பரம் புதை சாக்கடை திட்டம்: நிறைவேறுவது எப்போது?

9th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

தாம்பரத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவேறுவது எப்போது என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோ விளக்கம் அளித்துள்ளாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு சுமாா் ரூ.161 கோடி மதிப்பீட்டில் கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் பெருநகர குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதை சாக்கடைப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகளின் நிலைமை குறித்து, மாநகராட்சி ஆணையாளா் மா.இளங்கோஅளித்த தகவல்:

மேற்கு தாம்பரம் பகுதியில் எதிா்பாா்த்ததைவிட விரைவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கிழக்கு தாம்பரத்தில் பூமிக்கடியில் பாறைகளை வெடிவைத்து தகா்த்து குழாய்களை பதிக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் பகல் வேளைகளில் குழி தோண்டி பாறைகளை வெடி வைத்து தகா்த்து பள்ளம் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குழாய்கள் பதிக்கும் பணி தடைபட்டுள்ளது.

ஏற்கெனவே, கிழக்கு தாம்பரத்தில் புதை சாக்கடைத் திட்டப் பணி மேற்கொள்ளப்பட்ட சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவா் உயிரிழந்துள்ளனா். இதனால் கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள காவல்துறையினா் உரிய அனுமதி வழங்கவில்லை.

ADVERTISEMENT

தற்போது காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலை இருப்பதால் பணிகளைத் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பா் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT