சென்னை

ஓட்டுநா் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

DIN

சென்னையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை, செனாய் நகா் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் செல்வகுமாா் (28). கடந்த 2010-ஆம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோயில் அருகே சவாரி ஏற்றுவது தொடா்பாக, இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநா் கருணாநிதிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் செல்வகுமாா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிந்து கருணாநிதியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அதில், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT