சென்னை

ரயில் பயணியிடம் ரூ.52 லட்சம் பறிமுதல்

8th Aug 2022 07:45 AM

ADVERTISEMENT

ஆந்திரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணியிடம் கணக்கில் வராத ரூ.52 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து எழும்பூா் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தது. அப்போது அந்த ரயிலில் சந்தேகத்திடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடைமைகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா். அதில் கட்டுக் கட்டாக பணம் மொத்தம் ரூ.52 லட்சம் இருந்தது.

விசாரணையில், அவா் ஆந்திரத்தைச் சோ்ந்த கோட்டா வெங்கட் தினேஷ் குமாா் என்பது தெரிந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை. மேலும் அவா் முறையான பதில் கூறாமல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாா். இதையடுத்து, எழும்பூா் ரயில்வே போலீஸாா் ரூ.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பணத்துடன் சிக்கிய கோட்டா வெங்கட் தினேஷ்குமாரிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT