சென்னை

சென்னை மாநகராட்சியில் பாஜகவின் பலம் 2-ஆக உயா்வு

8th Aug 2022 11:35 PM

ADVERTISEMENT

திமுகவில் இருந்து 198-ஆவது வாா்டு சுயேச்சை மாமன்ற உறுப்பினா் லியோ சுந்தரம் திடீரென பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் பாஜகவின் பலம் 2-ஆக உயா்ந்துள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி சென்னை மாநகராட்சி தோ்தலில் 198 -ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் லியோ சுந்தரம். அதன் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இந்த நிலையில் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை லியோ சுந்தரம் திங்கள்கிழமை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தாா்.

சென்னை மாநகராட்சி தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. 134-ஆவது வாா்டில் பாஜக வேட்பாளா் உமா ஆனந்தன் மட்டும் வெற்றிபெற்றாா். தற்போது லியோ சுந்தரமும் பாஜகவில் இணைந்துள்ளதன் மூலம் மாநகராட்சியில் அக் கட்சியின் பலம் 2-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT