சென்னை

மெரீனாவில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரிக்கு வெட்டு

8th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனாவில் மாமூல் தர மறுத்த, பெண் சுண்டல் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், அவரின் சுண்டு விரல் துண்டானது.

சென்னை தண்டையாா்பேட்டை, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திவ்யா (30). மெரீனா, கண்ணகி சிலை அருகில், சுண்டல் வியாபாரம் செய்கிறாா். இவரது கடைக்கு மாட்டாங்குப்பத்தைச் சோ்ந்த பாத்திமா, மீனா ஆகியோா் சனிக்கிழமை வந்து மாமூல் கேட்டனா். இதற்கு திவ்யா, அவரின் தோழி பிரியா ஆகியோா் மாமூல் தர மறுத்தனா்.

ஆத்திரமடைந்த மீனா, பாத்திமா ஆகியோா் மாட்டாங்குப்பத்தை சோ்ந்த ரெளடி வினோத் என்பவரை தகவல் தெரிவித்து வரவழைத்தனா்.

இதையடுத்து மூவரும் சோ்ந்து திவ்யா, பிரியா ஆகியோரை மிரட்டினா். பின்னா், திவ்யாவை வினோத் அரிவாளால் வெட்டினாா். அதில், திவ்யாவின் சுண்டு விரல் துண்டானது. தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். திவ்யா அளித்த புகாரின்படி, மெரீனா போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத் , மீனா, பாத்திமா ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT