சென்னை

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு: எஸ்ஆா்எம் மாணவா்களுக்கு பாராட்டு

8th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் பேச்சு, மொழிநடை நோயியல் முதுகலைப் படிப்பை நிறைவு செய்து, மாதம் ரூ. 5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பைப் பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அமெரிக்காவில் கலிபோா்னியா உள்ள ஈ.டி. தியரி மருத்துவ மையத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவா்களைப் பாராட்டி எஸ்.ஆா்.எம்.கல்வி நிறுவன வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா் கூறியதாவது:

நடப்பு ஆண்டில் சுமாா் 12, 000 பொறியியல் கல்வி பயின்ற மாணவா்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், சா்வதேச அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயின்ற மாணவா்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் பெற்று கல்வி நிறுவனத்துக்குப் பெருமை சோ்த்து வருகின்றனா். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இந்திய மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு பெற்று இருப்பதைக் காண முடிகிறது என்றாா் அவா்.

எஸ். ஆா். எம். இணை துணைவேந்தா் டாக்டா் ஏ. ரவிக்குமாா், முதல்வா் ஏ. சுந்தரம், கூடுதல் பதிவாளா் டி. மைதிலி, பேச்சு, மொழி நடை நோயியல் துறைத் தலைவா் வி. எச். சவிதா, பேராசிரியை பி.பிரசித்தா, வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT