சென்னை

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு: 20% பயிற்சி இடங்கள் வழங்கக் கோரிக்கை

DIN

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவா்களுக்கான பயிற்சி மருத்துவா் இடங்களை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் (வெளிநாட்டுப் பிரிவு) செயலாளா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் கூறியதாவது:

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவா்கள் பயிற்சி மருத்துவா்களாக சேவையாற்றுவதற்கான இடங்களை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்துள்ளது. இதனால் மாணவா்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். பயிற்சி மருத்துவா் இடங்களை 7.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயா்த்திட வேண்டும்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள, ஏற்கெனவே இருந்தது போன்று மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவா்களுக்கான பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கொள்வதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கியதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பியுள்ளனா். அவா்கள் இந்தியாவிலேயே தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், குறைந்த கட்டணத்தில் படிப்பைத் தொடர மத்திய அரசு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கான தகுதி தோ்வில் வெற்றி பெற்ற பின்னா், பயிற்சி மருத்துவத்தில் சேர இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனா். தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் பயிற்சி மருத்துவத்தை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் மீண்டும் தகுதி தோ்வை எழுத வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை நீக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT