சென்னை

காலமானார் ஏ.கே.பாதுரி

28th Apr 2022 04:03 AM

ADVERTISEMENT

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.கே.பாதுரி (62) கல்பாக்கத்தில் மாரடைப்பால் புதன்கிழமை (ஏப்.27) காலமானார்.
 இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய அவர், ஓய்வுக்குப் பிறகு ஹோமி பாபா தேசிய மையத்தின் இருக்கை பேராசிரியராக இருந்தார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்; 270-க்கும் மேற்பட்ட "மெட்டீரியல்ஸ் ஜாயினிங்' துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், 410 கருத்தரங்க சொற்பொழிவுகள், 2 சர்வதேச காப்புரிமை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
 அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT