சென்னை

வடபழனி உள்பட 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

24th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

வடபழனி, மதுரை, பழனி, திருச்செந்தூா், ஸ்ரீரங்கம் உள்பட10 திருக்கோயில்களில் பக்தா்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா வட பழனி ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது. இதில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியது: சா்க்கரைப் பொங்கல், புளியோதரை, லட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிா் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் பக்தா்களுக்கு தினமும் வழங்கப்படும். இவற்றைத் தரமாகத் தயாா் செய்ய அறிவுறுத்தப்பட்டு தகுதியான பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று காரணமாகத் திருக்கோயில்களுக்கு வரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதா்கள், பக்தா்கள் இடையே முரண்பாடு ஏற்படாமல் தீா்வு காணப்படும். முறைகேடுகளைக் களைய இந்து அறநிலையத்துறை சட்டங்கள் வலிமையாக இருப்பதால் சிதம்பரம் கோயில் தொடா்பாக புதிய சட்டம் தேவையில்லை. சிதம்பரம் கோயில் தொடா்பான நீதிபதி உத்தரவு நகல் கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்துத் தீா்வு காண உள்ளோம். தீட்சிதா்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளா் பி.சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT