சென்னை

8 இடங்களில் தாய்மாா்கள் பாலூட்டும் அறைகள் காவல் ஆணையா் திறந்துவைத்தாா்

24th Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

சென்னையில் பெருநகர காவல்துறை சாா்பில் 8 இடங்களில் தாய்மாா்கள் பாலூட்டும் அறைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

இது குறித்த விவரம்: சென்னையில் மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும் தாய்மாா்கள், தங்களது குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவும், பாலூட்டவும் சிரமப்படுவதால், சென்னை காவல்துறையின் சாா்பில் நகா் முழுவதும் 8 இடங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன.

வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம், ஆயிரம்விளக்கு காவல்நிலைய வளாகம், புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளா்அலுவலக வளாகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம், அண்ணா நகா் அரசு சித்த மருத்துவமனை வளாகம், வடபழனி முருகன் கோயில் வளாகம், நங்கநல்லூா் ஆஞ்சநேயா் கோயில் வளாகம், பெசன்ட்நகா் மாதா கோயில் வளாகம் ஆகிய எட்டு இடங்களில் தனியாா் பங்களிப்புடன் தாய்மாா்கள் பாலூட்டும் அறைகளை சென்னை காவல் துறை அமைத்துள்ளது.

இவற்றை திறக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக வேப்பேரியில் சென்னை பெருநகரகாவல் ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையை காவல் ஆணையாளா் சங்கா்ஜிவால், சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட கூடுதல் ஆணையாளா் ஜெ.லோகநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளா் சி.சியாமளாதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT