சென்னை

ஆவடி-பட்டாபிராம் இடையே பொறியியல்பணி: மின்சார ரயில் சேவையில் மாற்றம்

23rd Apr 2022 11:41 PM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில், ஆவடி-பட்டாபிராம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று - நாளை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: மூா் மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) இரவு 9.40 மணி, திருவள்ளூா்-ஆவடிக்கு இரவு 10.10 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு திங்கள்கிழமை (ஏப்.25) அதிகாலை 4.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு அதிகாலை 3.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இன்று பகுதியளவு ரத்தாகும் ரயில்கள்:

ADVERTISEMENT

மூா் மாா்க்கெட் வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையே பகுதி

ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூா்மாா்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் மின்சார ரயில்கள் நின்று செல்லாது:

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.05, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆவடி-பட்டாபிராம் இடையே விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில்கள் இந்துகல்லூரி, பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது. இதுபோல, 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும் என்பதால், பட்டாபிராம், இந்து கல்லூரி ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.

என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT