தாம்பரம்: வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் ஸ்ரீராமானுஜா் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் மூலம் 1,423 போ் வேலைவாய்ப்பு பெற்றனா்.
ஸ்ரீராமானுஜா் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ பாலாஜி தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் ஜோஹோ, வீல்ஸ் இந்தியா, டாஃபே, சாம்சங், எல்.ஜி, ஹெக்சாவோ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த 4,062 மாணவ, மாணவிகள் நோ்முகத் தோ்வுக்கு வருகை தந்தனா்.
வேலைவாய்ப்பு பெற்ற அனைவருக்கும் ராமானுஜா் பொறியியல் கல்லூரி செயலா் ஜி.காமராஜ், தாளாளா் எம்.நித்யசுந்தா் பணிநியமன ஆணையை வழங்கினா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா்கள் ஏ.தனபால், எஸ்.ஜோதிலட்சுமி, வேலைவாய்ப்பு அதிகாரிகள் தெய்வமனோகரி, பூா்ணசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.